தற்போது 'கழிப்பாலை கோயில்' என்று அழைக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றங்கரையில் இக்கோயில் இருந்ததாகவும், ஒருசமயம் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அக்கோயில் அழிந்துவிட்டதாகவும், தற்போது உள்ள இடத்தில் இக்கோயில் எழுப்பப்பட்டதாகவும் கூறுவர். இக்கோயில் உள்ள அதே தெருவில் 'திருநெல்வாயில்' என்னும் மற்றொரு தேவாரத் தலமும் உள்ளது.
மூலவர் 'பால்வண்ணநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'வேதநாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள். இக்கோயிலில் உள்ள பைரவர் தனது வாகனம் (நாய்) இல்லாமல் தனியாக உள்ளார். இதேபோல் காசியில் உள்ளதால் இது காசிக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. அஷ்டமி நாட்களில் இவருக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இக்கோயில் உள்ள அதே தெருவில் 'சிவபுரி' அழைக்கப்படும் 'திருநெல்வாயில்' என்னும் மற்றொரு தேவாரத் தலம் உள்ளது.
திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், அப்பர் 4 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
|